கப்பல் போக்குவரத்து பாதிப்பால் பஞ்சம் உருவாகலாம்: ஜேர்மன் அமைச்சர் எச்சரிக்கை
German Foreign Minister Johann Wadephul warns shipping disruptions could lead to famine: கப்பல் போக்குவரத்து பாதிப்பால் பஞ்சம் உருவாகலாம் என ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இஸ்தான்புல்லில் நடைபெறும் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஜோஹன் வேட்ஃபுல் (Johann Wadephul), ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
பஞ்சம் உருவாகலாம் என எச்சரிக்கை
அப்போது அவர், சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களின் தாக்கத்தை நாம் அனைவரும் எரிவாயு நிலையம் முதல் பல்பொருள் அங்காடிகள் வரை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், உலகின் சில பாகங்களுக்கு சரியான நேரத்தில் உரம் சென்று சேராததால், அங்கு பஞ்சம் ஏற்படும் அச்சம் உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது, பாப் அல்-மண்டேப் நீரிணை மீதான ஹவுதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் மற்றும் கருங்கடலில் கப்பல்கள் மீது ரஷ்ய தாக்குதல் ஆகிய அனைத்து விடயங்களையும் சுட்டிக் காட்டியே இப்படிக் கூறியுள்ளார் வேட்ஃபுல்.
சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள், கோதுமை போன்ற அடிப்படை உணவுப்பொருட்களை நம்பியிருக்கும் ஏழை நாடுகள் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றார் அவர்.
சரக்குக் கப்பல்கள் மற்றும் அண்டை நாடுகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று கூறியுள்ள அவர், பல இடங்களில் மக்கள் பசியால் வாடும் நிலையில், தங்கள் சொந்த வீடுகளிலேயே பாதுகாப்பில்லாமல் உணரும் நிலையில், தொடரும் இந்த பாதுகாப்பின்மை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் கூறியுள்ளார்.