குளிர் சாதன அமைப்புகள் தொடர்பில் ஜேர்மன் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை
German watchdog warns some cooling systems remain vulnerable to hacking: ஜேர்மனியிலுள்ள குளிர் சாதன அமைப்புகள் தொடர்பில் பாதுகாப்பு அமைப்பொன்று எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியிலுள்ள குளிர் சாதன அமைப்புகளும் ஹேக் செய்யப்படலாம் என ஜேர்மன் ஃபெடரல் தகவல் பாதுகாப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை
பிரான்சில் குளிர் சாதன அமைப்புகள் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட விடயம் நினைவிருக்கலாம்.

இந்நிலையில், ஜேர்மனியிலுள்ள சில குளிர் சாதன அமைப்புகளுக்கும் ஹேக்கர்களால் பிரச்சினை ஏற்படலாம் என ஜேர்மன் ஃபெடரல் தகவல் பாதுகாப்பு அலுவலகமான BSI எச்சரித்துள்ளது.
அதாவது, இதுவரை பாதிக்கப்பட்ட குளிர் சாதன அமைப்புகள், டென்மார்க் நிறுவனமான Danfoss நிறுவனத்துக்குச் சொந்தமானவை.
ஆகவே, ஜேர்மனியில் பயன்படுத்தப்பட்டுவரும் Danfoss நிறுவனத்துக்கு சொந்தமான குளிர் சாதன அமைப்புகளுக்கு ஹேக்கர்களால் பிரச்சினை ஏற்படலாம் என்றும், முடிந்தால் அவற்றை ஒன்லைனிலிருந்து துண்டிக்க அல்லது தக்க VPN மூலம் பாதுகாக்க BSI அறிவுறுத்தியுள்ளது.