அகதியை தாறுமாறாக தாக்கிய ஜேர்மானியர்... ஜேர்மனியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ
ஜேர்மனியில் ட்ராம் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த சிரிய அகதி ஒருவரை ஜேர்மானியர் ஒருவர் தாறுமாறாக தாகுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் நகரமான Erfurtஇல், ட்ராம் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த 17 வயது சிரிய அகதி இளைஞர் ஒருவரிடம் 39 வயது ஜேர்மானியர் ஒருவர் வம்பிழுத்திருக்கிறார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, அந்த ஜேர்மானியர் திடீரென அந்த சிரிய இளைஞரை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளார். அந்த இளைஞரை கேவலமாக திட்டியதுடன், முகத்தில் துப்பவும், முகத்தில் மிதிக்கவும் செய்துள்ளார் அந்த ஜேர்மானியர்.
இதைக் கண்ட ட்ராமில் இருந்த மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள். அத்துடன், இந்த தாக்குதல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது.
துரிங்கியா (Thuringia) மாகாண ஆளுநரான Bodo Ramelow, இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளதோடு, தாக்குதல் நடத்தியவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.