காட்டுப்பன்றியை கூட புடின் என்று அழைக்கக்கூடாது! பெயரை மாற்றிய ஜேர்மன் வனவிலங்கு பூங்கா
ஜேர்மனியில் வனவிலங்கு பூங்காவில் வளர்க்கப்படும் காட்டுபன்றியை கூட புடின் என்ரூ அழைக்க சங்கடமாக இருப்பதாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.
பவேரியாவில் உள்ள விலங்கு பூங்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நினைவாக்க புடின் என்ற பெயரில் ஒரு காட்டுப்பன்றி வளர்க்கப்படுகிறது.
ஜேர்மனியில் பொதுவாகக் காணப்படும் காட்டுப்பன்றியை விட சுமார் 200 கிலோகிராம் (440 பவுண்டுகள்) எடையுள்ள தூய்மையான ரஷியப் பன்றி என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பன்றிக்கு புடின் என்று பெயர் வைத்ததாக விலங்குப் பூங்காவின் ஆபரேட்டர் எக்கார்ட் மிக்கிஷ் கூறினார்.
அனால், ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனில் போர் வெடித்துள்ள நிலையில், பவேரியாவில் உள்ள Mehlmeisel வனவிலங்கு பூங்கா சில வாரங்களாக அந்த பன்றிக்கு பெயர் மாற்றம் செய்ய முயற்சித்து வந்தது.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 19, செவ்வாய்க்கிழமை) விலங்குகளுக்கான நடத்தப்பட்ட விழாவில் அந்த பன்றிக்கு புடின் என்ற பெயரை மாற்றி வேறு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்து நூறாயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் ஜேர்மனிக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் Mehlmeisel வனவிலங்கு பூங்காவில் இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் போர் வெடித்த பிறகு பன்றியின் பெயரை அழைப்பது சங்கடமானதாக இருந்ததாகவும், விருந்தினர்கள் (உக்ரைன் அகதிகள்) மத்தியில் அழைக்க புடின் ஒரு மோசமான பெயராக இருப்பதாகவும் பூங்காவின் ஆபரேட்டர் எக்கார்ட் மிக்கிஷ் கூறினார்.
காட்டுப்பன்றிக்கு புதுப்பெயர் சுட்ட ஆன்லைன் வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்டதில், பிரபலமான உக்ரேனிய பெயர்களான ஜெலென்ஸ்கி மற்றும் கிளிட்ச்கோ போன்ற பெயர்களும், குத்துச்சண்டை சகோதரர்களான விட்டலி மற்றும் விளாடிமிர் பெயர்களும் கூறப்பட்ட நிலையில், இறுதியில் தற்போதைய இக்கட்டான நிலைக்கு அரசியலற்ற மாற்றாக "எபர்ஹோஃபர்" (Eberhofer) என்று பெயர் சூடப்பட்டது.
2,700 பரிந்துரைகளுக்குப் பிறகு, பவேரியாவில் ரீட்டா பால்க் எழுதிய பிரபலமான புத்தகத் தொடரில் பொலிஸ் அதிகாரியின் பெயரான எபர்ஹோஃபரை Mehlmeisel விலங்குப் பூங்கா தேர்ந்தெடுத்தது.