ஹன்டா வைரஸ் தொற்றுக்கு பலியான நபருடன் தொடர்பிலிருந்த ஜேர்மன் பெண்
ஹன்டா வைரஸ் தொற்றுக்கு பலியான நபருடன் தொடர்பிலிருந்த ஜேர்மன் பெண்ணொருவர், ஜேர்மனிக்குக் கொண்டு வரப்படுகிறார்.
பலியான நபருடன் தொடர்பிலிருந்த ஜேர்மன் பெண்
அர்ஜெண்டினாவிலிருந்து Cape Verde என்னுமிடத்துக்குப் பயணித்துக்கொண்டிருந்த MV Hondius என்னும் சொகுசுக் கப்பலில் பயணித்த சுற்றுலாப்பயணிகள் சிலருக்கு ஹன்டா வைரஸ் என்னும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பலியாகிவிட்டதால் இந்த விடயம் பல நாடுகளில் பரபரப்பை உருவாக்கிவருகிறது.
இந்நிலையில், பலியான மூன்று பேரில் ஒரு பெண் ஜேர்மானியர் என்றும், மற்றொரு ஜேர்மன் பெண் அவருடன் தொடர்பிலிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, அந்த ஜேர்மன் பெண்ணை ஜேர்மனியின் Duesseldorfஇலுள்ள மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டுவரும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பதற்காக அறிகுறிகள் இல்லை என்றாலும், தொற்றுநோய்ப்பிரிவில் அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.
அதன் பின் அவர் தனது வீட்டுக்கு அனுப்பப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |