ஜேர்மன் பாணியில் பிரித்தானியாவிலும் நடக்கலாம்... பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று பிரித்தானியாவிலும் நடக்கலாம் என்ற அச்சம் திடீரென்று எழுந்துள்ளது.
தகவல் தெரிவிக்கவும்
பயங்கரவாத தடுப்பு நிபுணர் ஒருவர் பொதுமக்களை எச்சரித்துள்ளதுடன், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜேர்மனியின் Magdeburg நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இதுவரை நால்வர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியானதுடன், 80 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட 50 வயது கடந்த சவுதி அரேபிய நாட்டவரான மருத்துவரை ஜேர்மன் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையிலேயே பிரித்தானியாவின் முன்னாள் பயங்கரவாத தடுப்பு நிபுணர் Chris Phillips பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜேர்மனியில் நடந்த சம்பவம் கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அப்படியான ஒரு தாக்குதல் பிரித்தானியாவில் நடக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். ஏதேனும் வித்தியாசமாக பார்க்க நேர்ந்தால், சந்தேகத்திற்கிடமான நடத்தையாக இருந்தால் உடனடியாக புகாரளிக்கவும் என்றார்.
இலக்குகளாக இருக்கலாம்
பொதுவாக கிறிஸ்துமஸ் சந்தைகளை பயங்கரவாதிகள் இலக்கு வைப்பதுண்டு என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் கிறிஸ்துமஸ் சந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கூடாது என்றார்.
ஏற்கனவே, கிறிஸ்துமஸ் சந்தைகள் தொடர்பில் பிரித்தானியப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் சந்தைகள், வணிக வளாகங்கள், கச்சேரிகள் மற்றும் பாண்டோக்கள் அனைத்தும் இலக்குகளாக இருக்கலாம் என எச்சரித்துள்ளனர்.
பிரதி உதவி ஆணையர் ஜான் சாவெல் தெரிவிக்கையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பொலிசாரின் வேலை சிறப்பாக அமையாது என்றார். ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்றிரவு நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒரு சிறு குழந்தையும் அடங்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |