பிரான்சைப் போல ஜேர்மனியிலும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டம்
German youth plan France style mass protests: பிரான்சைப் போல ஜேர்மனியிலும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்களை நடத்த ஜேர்மன் இளைஞர்கள் திட்டமிட்டுவருகிறார்கள்.
ஜேர்மனியின், Gen Z regelt அல்லது Gen Z's Got It என்னும் இளைஞர் அமைப்பு, அக்டோபர் மாதம் 31ஆம் திகதி, ஜேர்மனியிலுள்ள 21 நகரங்களில், பிரம்மாண்ட பேரணிகளை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
பிரான்சைப் போல ஜேர்மனியிலும்...
அந்தப் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மோசமான நிலைமையிலிருக்கும் பள்ளிகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, சமூக அநீதி, கட்டாய ராணுவ சேவை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை முன்வைத்து பேரணிகள் நடத்தப்பட உள்ளன.

பிரான்சில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்துள்ள நிலையில், Gen Z regelt அமைப்போ, தாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் என்று கூறியுள்ளது.
அதற்கேற்றாற்போல, ஜேர்மன் பொலிசாரும், தாங்கள் விழிப்புடனும், அதே நேரத்தில் ரிலாக்ஸாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளதுடன், மக்கள் கூடுவதற்கும், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான உரிமைகளை பாதுகாப்பதே தங்கள் நோக்கம் என்று கூறியுள்ளனர்.