40 லட்சம் கிலோ உருளைக்கிழங்குகளை இலவசமாக கொடுக்கும் ஜேர்மானியர்
ஜேர்மனியிலுள்ள பண்ணை உரிமையாளர் ஒருவர், சுமார் 40 லட்சம் கிலோ உருளைக்கிழங்குகளை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளார்.
பின்னணி
வியாபாரி ஒருவர், ஜேர்மனியின் Saxony மாகாணத்திலுள்ள பண்ணை ஒன்றில் உருளைக்கிழங்குகள் ஆர்டர் செய்துள்ளார்.

எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டு உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக இருப்பதால், உருளைக்கிழங்கு வியாபாரம் தனக்கு எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்காது என்பதை உணர்ந்த அந்த வியாபாரி, உருளைக்கிழங்கை வாங்கவில்லை.
இருதரப்பும் பேசி பண விடயங்களை செட்டில் செய்துவிட்டாலும், அந்த பண்ணையில் உருளைக்கிழங்குகள் குவிந்துகிடக்கின்றன.
ஆகவே, அவை வீணாய்ப்போவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதைவிட, அந்த உருளைக்கிழங்குகளை இலவசமாகவே கொடுத்துவிட அந்தப் பண்ணை உரிமையாளர் முடிவு செய்துள்ளார்.
சும்மாவே ஜேர்மானியர்களுக்கு உருளைக்கிழங்கு என்றால் கொள்ளைப் பிரியம்.
தனக்கு அப்படியிருக்கும்போது, இலவசமாக உருளைக்கிழங்கு கிடைக்கிறது என்றால் சும்மா விடுவார்களா? ஆகவே, இலவச உருளைக்கிழங்குகளை பெற்றுக்கொள்ள மக்களும், பல்வேறு அமைப்பினரும் பெர்லினில் குவிந்துள்ளார்களாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |