1 டிரில்லியன் யூரோ நிதியை இலவசமாக பெற்ற ஜேர்மன் அரசாங்கம்
ஜேர்மன் அரசாங்கம் 1 டிரில்லியன் யூரோ நிதியை இலவசமாக பெற்றுள்ளதாக ஜேர்மனியின் டாய்ச்சே வங்கி தலைவர் கூறியுள்ளார்.
ஜேர்மன் அரசாங்கம் 1 டிரில்லியன் யூரோ மதிப்பிலான நிதியை கட்டணமின்றி பெற்றுள்ளது என Deutsche Bank AG தலைவர் அலெக்ஸாண்டர் வினைண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் வரலாற்று சிறப்பு மிக்க செலவுத்திட்டத்தை அறிவித்ததன் விளைவாக இது சாத்தியமாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஐரோப்பிய பாதுகாப்புக்கான அமெரிக்க உறுதிப்பாட்டிலிருந்து பின்வாங்கியன் காரணமாக, ஜேர்மன் அரசாங்கம் கடந்த வாரம் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக கடனாக எடுக்க முடிவு செய்தது.
இதனால் ஐரோப்பா முழுவதும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நேர்மறை விளைவு பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளது.
ஜேர்மனி இந்த நிதியை திறமையாக பயன்படுத்தினால் அதன் வளர்ச்சி நிலையாக இருக்கும்.
ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை குறைத்தல், வரி மாற்றங்கள், தொழிலாளர் சட்ட திருத்தங்கள் ஆகியவை அவசியம்.
பாதுகாப்புத் துறையில் நீண்டகால ஒழுங்கின்மையின் விளைவாக, சில முதலீடுகள் சரியாக பயன்படுத்தப்படாமல் போகலாம்.
எனவே, "இந்த வரலாற்று சிறப்பு மிக்க முதலீட்டை வீணாக்கக்கூடாது" எனவும் வினைண்ட்ஸ் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |