தூதரகம் மூடப்படும்.. ஜேர்மனியர்கள் உடனே இந்த நாட்டை விட்டு வெளியேற உத்தரவு
உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தனது குடிமக்களை ஜேர்மனி அறிவுறுத்தியுள்ளது.
ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகமே இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளது என்ற அச்சம் இருக்கும் அதே வேளையில், பிராந்தியத்தில் மோதல்களை தவிர்க்க முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கிழக்கில் உள்ள Donetsk நகரில் இருக்கும் தனது தூதரகத்தை மூடுவதாகவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
நீங்கள் தற்போது உக்ரைனில் இருந்தால், உங்கள் இருப்பு முற்றிலும் அவசியம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இல்லையென்றால், விரைவில் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று குடிமக்களுக்கு ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தியதை அடுத்து ஜேர்மனி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா, டென்மார்க், லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.