ஜேர்மானியர்கள் எதற்கு அதிகம் பயப்படுகிறார்கள்? ஆய்வு முடிவுகள்
Germans' biggest fear is the high cost of living: ஜேர்மானியர்கள், விலைவாசி உயர்வைக் குறித்துதான் அதிகம் பயப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜேர்மானியர்கள் அதிகம் பயப்படும் விடயம் என்ன? போரா, பருவநிலை மாற்றமா? உண்மையில், விலைவாசி உயர்வைக் குறித்துதான் ஜேர்மானியர்கள் அதிகம் பயப்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வு முடிவுகள்
சமீபத்தில், ஜேர்மானியர்களில் 14 வயதுக்கு மேற்பட்ட 2,400 பேரிடம் அவர்கள் எதைக் குறித்து அதிகம் பயப்படுகிறார்கள், கவலைப்படுகிறார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு முடிவுகள், ஜேர்மானியர்கள் விலைவாசி உயர்வைக் குறித்துதான் அதிகம் பயப்படுவதாகத் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இதேபோன்றதொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், 52 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வைக் குறித்து அதிகம் பயப்படுவதாகத் தெரிவித்திருந்தார்கள். அந்த எண்ணிக்கை தற்போது 59 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ஆய்வாளர்களில் ஒருவரான இசபெல் (Isabelle Borucki) என்பவர், முக்கியமான விடயங்களான எரிசக்தி, வீட்டு வாடகை மற்றும் உணவுப்பொருட்களுக்கான செலவு அதிகமாகிவிட்டது.
அதனால், பொழுதுபோக்கு, விடுமுறை, பொருட்கள் வாங்குதல் போன்ற விடயங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகவேதான் விலைவாசி உயர்வைக் குறித்து மக்கள் அதிகம் கவலைப்படுவதாகத் தெரிவிக்கிறார்.
அதுபோக, ஓய்வூதியம், காப்பீடு குறித்த பயமும் மக்களுக்கு உள்ளது. வரிகள் மற்றும் காப்பீட்டுக்கான பங்களிப்பு போன்றவை அதிகரிக்கலாம் என்றும் ஜேர்மானியர்கள் பயப்படுகிறார்கள்.
அத்துடன், அதிகரித்துவரும் அகதிகள் எண்ணிக்கை தொடர்பில் பயப்படுவதாக 52 சதவிகிதம் பேர் கூறியுள்ள நிலையில், இப்படி விலைவாசி, ஓய்வூதியம், காப்பீடு, வரிகள் முதலான விடயங்களைவிட, போர்கள் போன்ற விடயங்கள் தங்களை குறைவாகவே கவலைப்படவைப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் ஜேர்மானியர்கள்!