ஈரான் போரால் ஜேர்மன் மக்களுக்கு உருவாகியுள்ள அச்சம்
ஜேர்மனியில் சமீப காலமாக புலம்பெயர்தல் பெரும் அரசியலாகிவருவது அனைவரும் அறிந்ததே.
ஏஞ்சலா மெர்க்கல் சேன்ஸலராக இருந்தபோது சிரிய அகதிகள் லட்சக்கணக்கானோரை இருகரம் நீட்டி வரவேற்றது ஜேர்மனி.
தற்போதைய சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸோ, மக்கள் மனதில் இடம்பிடிப்பதற்காக, புலம்பெயர்தலை அரசியலாக்கி, வந்த அகதிகளையும் திருப்பி அனுப்புவதில் ஆர்வம் காட்டிவருகிறார்.
ஜேர்மன் மக்களுக்கு உருவாகியுள்ள அச்சம்
ஆக, இந்த அரசியல்வாதிகளால், மக்களுடைய மன நிலைமையிலும் பெரும் மாற்றம் உருவாகிவருகிறது.

அகதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிக்கும்போது, ஊடகங்கள் அதை பெரிதுபடுத்த, மக்களுக்கு அகதிகளுக்கெதிரான எண்ணங்கள் அதிகரிக்கின்றன.
இந்நிலையில், ஈரான் போரும் அகதிகள் தொடர்பிலான ஜேர்மன் மக்களுடைய அச்சத்தை அதிகரித்துள்ளது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஆம், Forsa என்னும் அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து, ஜேர்மன் பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு அகதிகள் குறித்த அச்சம் இருப்பது தெரியவந்துள்ளது.
சிரியா உள்நாட்டு யுத்தத்தின்போது ஜேர்மனி அகதிகளை ஏற்றுக்கொண்டதுபோல, தற்போது ஈரான் போரைத்தொடர்ந்து ஈரானிலிருந்து வரும் அகதிகளை ஜேர்மனி ஏற்றுக்கொள்ளுமானால், ஜேர்மனியால் சமாளிக்கமுடியாது என 73 சதவிகித ஜேர்மானியர்கள் கருதுகிறார்கள்.
ஈரான் போரால், ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற பயம் ஜேர்மானியர்கள் பலருக்கு உள்ளது அந்த ஆய்விலிருந்து தெளிவாகியுள்ளது.
2015, 2016 காலகட்டத்தில் சிரியா நாட்டவர்கள் உட்பட, ஜேர்மனியில் புகலிடம் கோரியவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |