படகில் வாழ்ந்துவந்த ஜேர்மானியர்கள்... புயலால் நேர்ந்த பரிதாபம்
ஜேர்மனியைச் சேர்ந்த தம்பதியர் படகு ஒன்றில் வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுடைய படகு புயலில் சிக்கியுள்ளது.
Annemarie மற்றும் Karl Frank என்னும் அந்த தம்பதியர், இரண்டு அமெரிக்கர்களை படகில் ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த நிலையில், படகு பயங்கர புயலில் சிக்கியுள்ளது.
அப்போது படகிலுள்ள பாய்மரத்தை சரி செய்வதற்காக Annemarie செல்ல, அடித்த புயலில் ஏதோ இடித்து அவர் காயமடைந்திருக்கிறார். அவருக்கு உதவுவதற்காக Karl செல்ல, அவருக்கும் அடிபட்டிருக்கிறது.
தம்பதியர் காயமடைந்ததைக் கண்ட அந்த அமெரிக்கர்கள் அவசர உதவியை அழைக்க, கடலோரக் காவல் படையினர் வந்து அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
படகில் வாழ முடிவு செய்த அந்த தம்பதியரின் வாழ்க்கை, படகிலேயே முடிந்து போனது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜேர்மன் பொலிசாரும் அமெரிக்கப் பொலிசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.