ஜேர்மனியில் ரோந்து சென்ற பொலிசார் கண்டெடுத்த பொருள் வெடிப்பு: ஒருவர் படுகாயம்
ஜேர்மனியில் பொலிசார் ரோந்து சென்றபோது, அடையாளம் தெரியாத ஒரு பொருள் வெடித்ததில் ஒரு பொலிசார் படுகாயமடைந்துள்ளார்.
அடையாளம் தெரியாத பொருள் வெடிப்பு
நேற்று, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பொலிசார் வழக்கமான ரோந்து பணியை மேற்கொண்டுள்ளார்கள்.
நேற்று இரவு 8.20 மணியளவில், Wittenau என்னுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது, பொலிஸ் நிலையம் ஒன்றின் வெளியே, வேலியருகே, அடையாளம் தெரியாத ஒரு பொருள் கிடந்துள்ளது.
Heute Abend gegen 20:20 Uhr kam es an der Umzäunung unseres Polizeiabschnitts 12 in #Wittenau zu einem schweren Sicherheitsvorfall, bei dem eine Kollegin und ein Kollege während eines routinemäßigen Sicherheitsgangs zum Teil schwer verletzt wurden.
— Polizei Berlin (@polizeiberlin) January 2, 2025
Nach ersten Ermittlungen… pic.twitter.com/kDAxdO1SCA
திடீரென அந்தப் பொருள் வெடித்ததில், பொலிசார் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஒருவருக்கு முகம் மற்றும் கண்களில் காயங்கள் ஏற்பட, மற்றவர், பலத்த வெடிச்சத்தம் ஏற்படுத்திய அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இருவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |