உக்ரைனிடம் போராடி தோல்வியில் இருந்து தப்பிய ஜேர்மனி அணி!
ஜேர்மனி மற்றும் உக்ரைன் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியான கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது.
நட்புமுறை போட்டி
ஜேர்மனியின் Weserstadion மைதானத்தில் நடந்த போட்டியில் உக்ரைனை எதிர்கொண்டது ஜேர்மனி. ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் நிக்லஸ் பியூல்கருக் கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து உக்ரைன் வீரர் விக்டர் 18வது நிமிடத்தில் கோல் அடித்தார். பின்னர் ஜேர்மனியின் ரூடிகேர் (23வது நிமிடம்) சுய கோல் அடித்ததால், முதல் பாதியில் உக்ரைன் 2-1 என முன்னிலை வகித்தது.
Oksana Vasilyeva
ஜேர்மனிக்கு அதிர்ச்சி
அதன் பின் விக்டர் மீண்டும் 56வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இது ஜேர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. டிராவில் முடிந்த ஆட்டம் எனினும், மாற்று வீரராக வந்த ஜேர்மனி வீரர் கை ஹாவேர்ட்ஸ் 83வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
ஆனாலும், உக்ரைன் 3-2 என முன்னிலையில் இருந்தது. இறுதிக்கட்ட பரபரப்பில் 90வது நிமிடத்தின் கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஜேர்மனி வீரர் கிம்மிக் கோல் அடிக்க, ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது.