ஆபத்தான சூழ்நிலையில் ஜேர்மனி! 400,000 புலம்பெயர்வோரை எதிர்நோக்கும் அரசு
திறமையான தொழிலாளர்கள் இல்லாமல் ஜேர்மனி ஒரு ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியுள்ளது என ஃபெடரல் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி கூறியுள்ளது.
இந்த சிக்கலை தீர்ப்பதற்காக, ஜேர்மன் அரசாங்கம், 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறமையான தொழிலாளர் குடியேற்றச் சட்டத்தைத் (Skilled Workers Immigration Act) தொடங்கியது.
அதன் மூலம் ஜேர்மனிக்கு திறமையான புலப்பெயர்வோரை குடியேற்றத்திற்கு அதிகரிப்பதற்கான மிகவும் விவேகமான அணுகுமுறை அரசாங்கம் முயற்சித்தது.
இந்த சட்டம் தொழில் திறன் கொண்ட திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா மற்றும் குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்கும் என திட்டமிடப்பட்டது.
ஆனால், கொரோனா வைரஸின் முதல் அலை மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், பயண விதிமுறைகள் அனைத்தும், அரசாங்கத்தின் இந்த திட்டத்தை சிதைத்தன.
2020-ல், ஜேர்மனியில் மக்கள் தொகை வளர்ச்சியடையவில்லை. அதேசமயம் தற்காலிக திறமையான குடியேற்ற விண்ணப்பங்கள் கூட 3 சதவீதம் குறைந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜேர்மனியிக்கு 400,000 புலம்பெயர்ந்தோர் தேவைப்படுவதாக ஃபெடரல் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி நம்புகிறது.
மேலும், நாட்டின் வேலை சந்தையில் உள்ள இடைவெளிகளை நிரப்ப அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கூறுகிறது.
இதற்கு, அரசாங்கம் திறமையற்ற தொழிலாளர்களைப் பயிற்றுவிக்கலாம் மற்றும் பகுதி நேரப் பெண் தொழிலாளர்களை அதிகமாக வேலை செய்ய ஊக்குவிக்கலாம் அல்லது அதிகமான புலம்பெயர்ந்தோரை ஜேர்மனிக்குக் கொண்டு வரலாம், இது சிக்கலைத் தீர்க்க மிகவும் தர்க்கரீதியான மற்றும் பயனுள்ள வழியாக இருக்கும் என ஃபெடரல் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி கூறுகிறது.
ஆனால், இதில் எந்த வழி சிறந்தது? என்று கேட்டால், அதற்கு மிக எளிய பதில் ஒன்று தான். உடனடியாக திறமையான புலம்பெயர்வோரை நாட்டுக்குள் வேலைக்கு எடுப்பது.
அந்தவகையில், வரும் 2022-ல் புதிதாக 4,00,000 திறமைவாய்ந்த புலம்பெர்வோரை ஜேர்மன் அரசாங்கம் வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தேகத்திற்கு இடமின்றி, ஜேர்மன் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க திறன் வாய்ந்த தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது.
தற்போது சுமார் 1.2 மில்லியன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன, மேலும் இது ஆரம்ப கட்டத்தில் கவனிக்கப்படாவிட்டால் காலப்போக்கில் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என கூறப்படுகிறது.