ஒரே டிக்கெட்டில் நாடு முழுவதும் பயணம்! 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தும் ஜேர்மனி
49 யூரோ பொது போக்குவரத்து பயணச்சீட்டு நாடு முழுவதும் செல்லுபடியாகும்.
ஆனால், 9 யூரோ டிக்கெட்டைப் போலவே, இது நகரங்களுக்கு இடையேயான ரயில்களுக்கு செல்லுபடியாகாது.
ஒரு மாதத்திற்கு 49 யூரோக்கள் (இலங்கை ரூ. 17,427) செலவாகும் பொதுப் போக்குவரத்து அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்த ஜேர்மனி விரும்புகிறது. இந்த பயணச்சீட்டு நாடு முழுவதும் செல்லுபடியாகும்.
முன்னதாக 9 யூரோ டிக்கெட் திட்டம் ஜேர்மனியில் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அதனை பின்பற்றி, அதிகாரிகள் நிதியுதவிக்கு உடன்பட்டால் இப்போது இந்த புதிய 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
9 யூரோ டிக்கெட் இந்த கோடையில் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டது, இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்திற்கு மாறுவதற்கும், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவும் வகையில் அமுல்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் பல விதத்தில் பயணிகளை மிகவும் ஈர்த்தது. குறிப்பாக, ஜேர்மனியின் அனைத்து மாநில பேருந்து, ரயில் மற்றும் டிராம் நெட்வொர்க்குகளிலும் செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்பட்டது மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.
ஜேர்மனியின் போக்குவரத்து அமைச்சர் வோல்கர் விஸ்சிங் (Volker Wissing) நாட்டின் 16 மாநிலங்களைச் சேர்ந்த தனது சகாக்களுடன் ஒரு சந்திப்பிற்குப் பிறகு வியாழனன்று இந்த புதிய 49-euro ticket பற்றி கூறினார்.
புதிய €49 டிக்கெட் காகிதமற்றதாக இருக்கும் என்றும் ஒரு மாதத்திற்கு அல்லது ரோலிங் பாஸாக வாங்கலாம் என்றும் விஸ்சிங் கூறினார்.
ஆனால், 9 யூரோ டிக்கெட்டைப் போலவே, இது நகரங்களுக்கு இடையேயான ரயில்களுக்கு செல்லுபடியாகாது.
டிக்கெட்டுக்கான நிதி தொடர்பான கேள்விகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டும். ஜேர்மனியின் மத்திய அரசாங்கம் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் யூரோக்களை மானியமாக வழங்க முன்வந்துள்ளது.
மாநில ரயில் சேவைகளுக்கான மத்திய அரசின் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தம் நிலுவையில் உள்ள நிலையில், மாநிலங்களும் இதைச் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.