ஜேர்மனி உள்ளிட்ட 7 நாடுகள் பிரித்தானியாவின் Green List-ல் சேர்ப்பு
பிரித்தானியாவின் கிரீன் ட்ராவல் லிஸ்டில் ஜேர்மனி உட்பட புதிதாக 7 நாடுகள் சேர்க்கப்படவுள்ளன.
பிரித்தானியாவின் அம்பர் பயணப் பட்டியலில் இருந்த ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, லாட்வியா, ருமேனியா மற்றும் நோர்வே ஆகிய 7 நாடுகள் தனிமைப்படுத்தல் இல்லாத கிரீன் ட்ராவல் லிஸ்ட் வகைக்கு மாற்றப்படுகிறது.
அதாவது பிரித்தானியர்களுக்கு கோடை விடுமுறையை கழிக்க கூடுதலாக ஏழு இடங்கள் கிடைத்துள்ளன. இந்த மாற்றங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) அதிகாலை 4 மணி முதல் அமுலுக்கு வரும் என்று அரசு உறுதி அளித்துள்ளது.
பிரான்ஸ் இன்னும் அம்பர் பயணப் பட்டியலில் இருந்தாலும், அங்கிருந்து வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டால் அவர்கள் இனி தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசு அம்பர் பட்டியலின் அமைப்பை இன்னும் எளிதாக்கியுள்ளது. அதாவது, அம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து பெரும் மக்கள், பிரித்தானியாவுக்கு வந்தவுடன் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.
இருப்பினும், அவர்கள் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்குள் எடுக்கப்பட்ட எதிர்மறை கோவிட் -19 சோதனைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும், மேலும் நாட்டிற்குள் நுழைந்த அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சோதனையை எடுக்க வேண்டும்.
இந்தியா ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் சிகப்பு பயணப் பட்டியலில் இருந்து அம்பர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரித்தானியாவின் Green Travel List-ல் வைக்கப்படும் நாடுகள் எவை?
UK's Green Travel List: (பச்சை பட்டியல்)
- ஆஸ்திரேலியா
- ஆஸ்திரியா
- புருனே
- பல்கேரியா
- பால்க்லேண்ட் தீவுகள்
- ஃபாரோ தீவுகள்
- ஜேர்மனி
- ஜிப்ரால்டர்
- ஹாங்காங்
- ஐஸ்லாந்து
- லாட்வியா
- மால்டா
- நியூசிலாந்து
- நோர்வே
- ருமேனியா
- சிங்கப்பூர்
- ஸ்லோவாக்கியா
- ஸ்லோவேனியா
- தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்
-
செயின்ட் ஹெலினா, அசென்ஷன் மற்றும் டிரிஸ்டன் டா குன்ஹா
UK's Green watch list: (பச்சை கண்காணிப்பு பட்டியல்)
- அங்குவில்லா
- அண்டார்டிகா/பிரிட்டிஷ் அண்டார்டிக் பிரதேசம்
- ஆன்டிகுவா மற்றும் பார்புடா
- பார்படோஸ்
- பெர்முடா
- பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசம்
- கெய்மன் தீவுகள்
- குரோஷியா
- டொமினிகா
- கிரெனடா
- இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம்
- மடீரா (போர்ச்சுகலின் பிரதான நிலப்பகுதி மற்றும் அசோர்ஸ் அம்பர் பட்டியலில் உள்ளன)
- மான்செராட் பிட்காயின், ஹென்டர்சன், டூசி மற்றும் ஓனோ தீவுகள்
- தைவான்
- துருக்கி மற்றும் கைகோஸ் தீவுகள்