ரஷ்யாவின் தேவையை ஜெர்மன் விரைவில் கைவிடும்: Olaf scholz அதிரடி!
ஜெர்மனியால் அனைவரும் எதிர்பார்ப்பதை விடவும் வேகமாக ரஷ்யாவிடம் இருந்து பூர்த்திசெய்யும் எரிவாயு தேவையை கைவிட முடியும் என அந்த நாட்டின் chancellor ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா சர்வதேச போர் விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் தொடர்ந்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இந்த பொருளாதார தடைகள் எவ்வாறு ரஷ்யாவிற்கு அனைத்து வகையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி நெருக்கடியை கொடுத்து வருகிறதோ, அதைப்போலவே 40 சதவிகிதம் வரை ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு நம்பி இருந்த ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த பொருளாதார தடையானது பெரும் நெருக்கடியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ரஷ்யாவின் மீது மேற்கு நாடுகள் வித்துள்ள இந்த பொருளாதார தடைகள் மூலம் ஏற்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு நெருக்கடியை நீக்குவதற்காக அமெரிக்கா போன்ற எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை தற்போது ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது.
ஆனால் அவற்றை உற்பத்தி நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு வருவதில் இன்னமும் மிக பெரிய சிக்கல் நிலவுவதால் இன்னும் சிறிது காலத்திற்கு ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நம்பியே ஐரோப்பிய நாடுகள் இருக்க வேண்டிய சூழலில் தொடர்கிறது.
இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்ப்பதை விடவும் வேகமாக ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையை ஜெர்மனி விரைவில் கைவிடும் என அந்த நாட்டின் chancellor ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளில் இருந்து வெளிவரும் சுதந்திர ஐரோப்பிய நாடுகளின் முயற்சி இனி திரும்ப பெறப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.