புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஜேர்மன் உளவுத்துறைக்கு எதிராக மேல்முறையீடு
வலதுசாரிக் கட்சியான AfD கட்சி தீவிரக் கொள்கைகள் கொண்ட ஒரு கட்சி என ஜேர்மன் உளவுத்துறை ஏஜன்சி தெரிவித்திருந்த நிலையில், அதை எதிர்த்து அக்கட்சி மேல்முறையீடு செய்துள்ளது.
ஜேர்மன் உளவுத்துறையின் அறிக்கை
ஜேர்மன் உளவுத்துறை ஏஜன்சியான BfV, வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி தீவிரக் கொள்கைகள் கொண்ட ஒரு கட்சி என தெரிவித்திருந்தது.
அக்கட்சி தொடர்பில் மேற்கொண்ட விரிவான ஆய்வைத் தொடர்ந்து, AfD கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்துவோரின், மக்கள் குறித்த இனம் மற்றும் வம்சாவளி அடிப்படையிலான கருத்து, சுதந்திரமான ஜனநாயக ஒழுங்கிற்கு ஏற்புடையதாக இல்லை என BfV கூறியிருந்தது.
சில குறிப்பிட்ட மக்கள் குழுக்களை சமூகத்தில் சமமாகப் பங்கேற்பதிலிருந்து விலக்குவதும், அரசியலமைப்பை மீறும் வகையில் அவர்களை நடத்துவதும், அதன் மூலம் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதும் அக்கட்சியின் நோக்கமாகும் என்றும் BfV கூறியிருந்தது.
எதிர்த்து மேல்முறையீடு
இந்நிலையில், ஜேர்மன் உளவுத்துறையின் முடிவை எதிர்த்து AfD கட்சி Cologne நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதைத் தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை, AfD கட்சியை தீவிரக் கொள்கைகள் கொண்ட ஒரு கட்சி என வெளிப்படையாக குறிப்பிடப்போவதில்லை என ஜேர்மன் உளவுத்துறை ஏஜன்சியான BfV தெரிவித்துள்ளது.
இந்நிலையில், AfD கட்சியை தீவிரக் கொள்கைகள் கொண்ட ஒரு கட்சி என வகைப்படுத்தியது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்ற செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ராய்ச்சர்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |