எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: பணத்தை திருப்பிக் கொடுக்க உக்ரைனுக்கு வலியுறுத்தல்
ரஷ்ய எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட இழப்பை, உக்ரைன் ஈடுசெய்ய வேண்டும் என ஜேர்மன் கட்சித் தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்
ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயுவைக் கொண்டு செல்வதற்காக, c 1 மற்றும் 2 என்னும் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டிருந்த குழாய்களுக்கு அருகில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி வெடிவிபத்துக்கள் நடந்துள்ளதை டென்மார்க் அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.

அந்த வெடிவிபத்தில் மூன்று குழாய்கள் சேதமானதைத் தொடர்ந்து எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், அது நாசவேலை என சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர், எரிவாயுக் குழாய்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், உக்ரைன் நாட்டவர் ஒருவர் இத்தாலி நாட்டில் கைது செய்யப்பட்டார்.
உக்ரைன் பணத்தை செலுத்த வலியுறுத்தல்
இந்நிலையில், ஜேர்மனியின் Alternative for Germany (AfD) கட்சித் தலைவரான ஆலிஸ் (Alice Weidel), எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட செலவை உக்ரைன் திருப்பிக் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Nord Stream திட்டத்துக்காக பல பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டுள்ளன என்றும், அந்த திட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த எரிவாயுக் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்ட இழப்பை உக்ரைனும் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இப்படி ஒரு சேதத்தை ஏற்படுத்திய ஒரு நாடு நம் நட்பு நாடாக இருக்கமுடியாது என்றும் கூறியுள்ள ஆலிஸ், நாங்கள் Nord Stream திட்டத்துக்காக 70 பில்லியன் யூரோக்கள் செலவிட்டுள்ளோம், அதை உக்ரைன் திருப்பிக் கொடுக்க வலியுறுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |