ரஷ்யா மீதான தடைகளை மீண்டும் உறுதிப்படுத்திய ஜேர்மனி
Germany again confirm sticks to russia sanctions: ட்ரம்பின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ரஷ்யா மீதான தடைகளை ஜேர்மனி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் முடிவுகளில் உறுதியாக உள்ளதாகவும், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தருவதாகவும் ஜேர்மனி தெரிவித்துள்ளது.
டீசல் விநியோகம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே டீசல் விநியோகம் தொடர்பில் ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஆனாலும், ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு டீசல் விநியோகிக்கப்படாது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
அதாவது, ரஷ்யாவுக்கு எதிரான தனது தடைகள் முடிவுகளில் ஜேர்மனி அரசாங்கம் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் ஆதரவு
அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபான் கோர்னேலியஸ், "ரஷ்யாவுக்கு எதிரான தனது தடைகள் முடிவுகளில் ஜேர்மன் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், தடைகள் விதிப்பது குறித்து தனது ஐரோப்பிய கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ரஷ்ய டீசல் விநியோகம் தொடர்பான அமெரிக்காவின் முடிவை ஜேர்மன் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது" என்கிறார்.
அத்துடன் உக்ரைனுக்கான ஜேர்மனியின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் கேத்தரினா ரீச்சின் செய்தித் தொடர்பாளர், ஜேர்மனி இந்தத் தடைகள் தொகுப்பை முழுமையாக ஆதரிக்கிறது. எங்கள் விநியோகம் பல்வகைப்பட்டது; நாங்கள் ரஷ்ய எண்ணெயை சார்ந்து இல்லை என்றார்.
