உக்ரைனுக்கு மேலும் கூடுதல் ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி ஒப்புதல்
உக்ரைனுக்கு மேலும் கூடுதல் ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று இது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் Christine Lambrecht, ஜேர்மனி உக்ரைனுக்கு வழங்க இருக்கும் ஆயுதங்களில், 7 howitzers என்னும் குண்டு வீசும் ஆயுதங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த howitzers போன்ற ஆயுதங்களைத்தான் ஜேர்மனியிடம் உக்ரைன் கேட்டுக்கொண்டே இருந்தது.
அத்துடன், இந்த ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும் என ஜேர்மன் இராணுவமும் தெரிவித்துள்ளது.
உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதிலிருந்தே, ஜேர்மனி உக்ரைனுக்கு போதுமான அளவில் உதவவில்லை என்ற விமர்சனத்துக்கு அதன் சேன்ஸலரான Olaf Scholz ஆளாகிவந்த நிலையில், தற்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022