ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி உக்ரைனுக்கு ஜேர்மனி செய்துள்ள உதவி: புடினுடைய ரியாக்ஷன் எப்படி இருக்குமோ?
ஆரம்பத்தில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க தயக்கம் காட்டிய ஜேர்மனி தற்போது உக்ரைனுக்கு போர் வாகனங்களை அனுப்பியுள்ளது.
தயக்கம் காட்டிய ஜேர்மனி
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, உக்ரைன் மற்ற நாடுகளிடம் ஆயுத உதவி கோரி வருகிறது. ஜேர்மனி ஆரம்பத்தில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க தயக்கம் காட்டியது.
தனது தயாரிப்பான போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுத்தால், அதனால் மூன்றாம் உலகப்போர் உருவாகலாம் என்பதுடன், அது ரஷ்யாவின் கோபத்தைத் தூண்டும் என்றும், அதனால் ஜேர்மனிக்கு பிரச்சினை உருவாகும் என்றும் எண்ணி, தானும் ஆயுதங்கள் வழங்க தயக்கம் காட்டியதுடன், மற்ற நாடுகள் தனது தயாரிப்பான Leopard tanks என்னும் போர்வாகனங்களை உக்ரைனுக்கு வழங்கவும் ஜேர்மனி அனுமதி மறுத்துவந்தது.
GETTY IMAGES
பின்னர், அமெரிக்கா முதலான கூட்டணி நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முன்வந்ததுடன், ஜேர்மனியும் ஆயுதங்கள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தன.
ஆகவே, கூட்டாளி நாடுகளைப் பின்பற்றி, தானும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி முடிவு செய்தது.
ஜேர்மன் போர் வாகனங்கள் உக்ரைனை சென்றடைந்தன
இந்நிலையில், Leopard 2 tank என்னும் ஜேர்மன் போர் வாகனங்கள் 18, உக்ரைனைச் சென்றடைந்துள்ளதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Boris Pistorius தெரிவித்துள்ளார்.
GETTY IMAGES
அத்துடன், அந்த போர் வாகனங்களை இயக்குவதற்கான பயிற்சியையும், ஜேர்மனி உக்ரைன் வீரர்களுக்கு அளித்துள்ளது.
அதேபோல, பிரித்தானியாவும் Challenger 2 tanks என்னும் தனது போர்வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. அவையும் உக்ரைன் வந்து சேர்ந்துவிட்டதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளரான Iryna Zolotar தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு செய்ததுமே ரஷ்யா கோபத்தில் கொந்தளித்தது.
இப்போது ஜேர்மனியும், பிரித்தானியாவும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ளதற்கு புடின் எப்படி ரியாக்ட் செய்யப்போகிறாரோ தெரியவில்லை!
GETTY IMAGES