200,000 விசாக்கள் வழங்க இலக்கு வைத்திருக்கும் ஜேர்மனி: விவரம் செய்திக்குள்
ஜேர்மனி, இந்த ஆண்டு இறுதிக்குள் திறன்மிகுப் பணியாளர்களுக்காக 200,000 விசாக்களை வழங்க இலக்கு வைத்துள்ளது,
200,000 விசாக்கள் வழங்க இருக்கும் ஜேர்மனி
ஜேர்மனியில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. சுமார் 1.34 மில்லியன் பணியிடங்கள் நாட்டில் இப்போது காலியாக உள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் திறன்மிகுப் பணியாளர்களுக்காக 200,000 விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 10 சதவிகிதம் அதிகமாகும்.
முக்கியமான விடயம் என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளிலிருந்து வரும் மக்கள், ஜேர்மனிக்குள் நுழையும் முன் தங்கள் கல்வித்தகுதி அங்கீரிக்கப்படவேண்டும் என்னும் விதியும் நீக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.6 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், 89 சதவிகிதமும் வெளிநாட்டவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |