திடீரென எல்லைக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள ஜேர்மனி: காரணம் இதுதான்..
கோவிட் காலகட்டத்தில் ஜேர்மனி உட்பட பல நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தன.
ஆனால், தற்போது ஜேர்மனி மீண்டும் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், அதற்குக் காரணம் கோவிட் அல்ல. ஜேர்மனியின் பவேரியாவில், இம்மாதம் (ஜூன்) 26ஆம் திகதி முதல், 28ஆம் திகதி வரை G7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
ஆகவேதான், ஜேர்மனியில் மீண்டும் எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் ஜூன் 13ஆம் திகதி முதல், ஜூலை 3ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என ஜேர்மன் பெடரல் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாநாட்டின்போது, நாட்டுக்குள் பயங்கர குற்றவாளிகள் நுழைவதைத் தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் பெடரல் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.