பணவீக்கத்தால் கஷ்டப்படும் பொதுமக்களுக்கு உதவ ஜேர்மனி அறிவித்துள்ள திட்டம்
*பணவீக்கத்தால் அவதியுறும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய விரும்புகிறார் உள்துறை அமைச்சர்.
*இந்த திட்டம் பணக்காரர்களுக்குத்தான் அதிகம் உதவும் என்கிறார்கள் விமர்சகர்கள்.
பணவீக்கத்தால் அவதியுறும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக ஜேர்மன் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் மக்கள் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைவாசி உயர்வால் அவதியுற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் ஜேர்மன் நிதியமைச்சரான Christian Lindner அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், சிறுபிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியையும் சற்று அதிகரிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

Moritz Frankenberg/Dpa/picture allign
அது என்ன திட்டம்?
நேரடியாக வரிகளைக் குறைப்பதற்கு பதிலாக, வரி செலுத்துவதற்கான வருமான வரம்பு உயர்த்தப்படுவதுதான் திட்டம்.
அதாவது, இதுவரை 10,347 யூரோக்கள் வரை ஊதியம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்தவேண்டாம் என்றிருந்த நிலையில், இனி, 10,632 யூரோக்கள் ஊதியம் பெறுபவர்கள் வரை வருமான வரி செலுத்தவேண்டாம் என்றும், 2024இல் இந்த விதியில் மேலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டு, 10,932 யூரோக்கள் ஊதியம் பெறுபவர்கள் வரை வருமான வரி செலுத்தவேண்டாம் என்றும் விதிமாற்றம் செய்யப்பட உள்ளது.
அத்துடன், சிறுபிள்ளைகளுக்கான நிதி உதவியும், இரண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகள் கொண்ட குடும்பத்திலுள்ள முதல் இரண்டு பிள்ளைகளுக்கு, 8 யூரோக்கள் உயர்த்தப்பட்டு மாதம் ஒன்றிற்கு 227 யூரோக்களாக ஆக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        