ஜேர்மனியில் சட்டப்பூர்வமான கஞ்சா விற்பனை: நன்மைகள், தீமைகள் என்ன?
ஜேர்மனியில் கஞ்சா பயன்பாட்டை அனுமதிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கஞ்சாவிற்கு அனுமதி
கஞ்சா பயன்பாட்டை அனுமதிப்பதற்கான சமீபத்திய ஒப்புதலால் ஜேர்மனியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த சட்டம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் அதிகபட்சமாக 25 கிராம் கஞ்சா வைத்திருப்பதையும், வீட்டில் மூன்று செடிகள் வரை வளர்ப்பதையும் அனுமதிக்கிறது.
இது நாட்டின் போதைப்பொருள் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது.
இதனால் திங்கட்கிழமை முதல் சட்டப்பூர்வமாக கஞ்சா வைத்து இருக்க அனுமதிக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய நாடாக ஜேர்மனி மாறியுள்ளது.
Malta மற்றும் Luxembourg ஆகிய கஞ்சாவுக்கு ஆதரவான சட்டங்கள் 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சட்ட சீர்திருத்தத்தின் அடுத்த நடவடிக்கையாக ஜூலை 1ம் திகதி முதல் நாட்டில் கஞ்சா கிளப்புகள் மூலம் சட்டபூர்வமான கஞ்சா-களை பெற முடியும்.
ஆதரவு மற்றும் எதிர்ப்பு
ந்த நடவடிக்கையை ஆதரிப்பவர்கள், இது மிகவும் பொறுப்பு வாய்ந்த அணுகுமுறையை நோக்கிய நீண்ட கால தாமதமான படியாக பார்க்கிறார்கள். கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்துவதற்கும், வரி வருவாயை உருவாக்குவதற்கும், கஞ்சாவின் தரம் மற்றும் வலிமையை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்கும் சட்டப்பூர்வமாக்குதல் உதவும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். எதிர்ப்பாளர்கள் இதன் எதிர்மறையான விளைவுகள் குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.
பொது சுகாதார அதிகாரிகள் இளையவர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகரிப்பது, அதனுடன் தொடர்புடைய போதை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி ஆபத்துகள் குறித்து கவலைப் படுகிறார்கள்.
போதைப்பொருள் அமலாக்க அதிகாரிகள் கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் போதைப் பாதிப்புடன் வாகனம் ஓட்டுதல் ஆகியவை குறித்த கவலைகளை எழுப்புகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany Approves Cannabis Pros Cons in Tamil