ஜேர்மனியில் ரஷ்ய அறிவியலாளர் கைது... வெளியான பின்னணி
ஜேர்மன் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றும் ரஷ்ய அறிவியலாளர் ஒருவர் கைது செய்யப்படுள்ளார். அவர் 2020 அக்டோபருக்கும் இம்மாதத்துக்கும் இடையில் ரஷ்ய உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவரை மூன்று முறை சந்தித்துள்ளார்.
அத்துடன், பல்கலைக்கழகத்திலிருந்தே அவர் சில தகவல்களை அந்த நபருடன் பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பணமும் பெற்றுக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவரை ஜேர்மன் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
அவரது பெயர் Ilnur N என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த கைது சம்பவம் குறித்து ஜேர்மனி அரசோ, ரஷ்யாவோ இதுவரை எந்த கருத்தும்
தெரிவிக்கவில்லை.