கடைசி கட்டத்தில் கோல் அடித்து.,ஜேர்மனியின் மானத்தைக் காப்பாற்றிய வீரர்
கானா அணிக்கு எதிரான நட்புப் போட்டியில் ஜேர்மனி அணி வெற்றி பெற்றது.
ஆதிக்கம் செலுத்திய ஜேர்மனி
ஜேர்மனி மற்றும் கானா அணிகளுக்கு இடையிலான நட்பு கால்பந்து போட்டி Stuttgart-யில் நடந்தது.

முதல் பாதியில் ஜேர்மனி அணி பந்தை அதிக நேரம் தன்வசம் வைத்திருந்ததுடன், ஆடுகளத்தில் ஆதிக்கத்தையும் கொண்டிருந்தது.
ஆட்டத்தின் 45+3வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில், ஜேர்மனியின் கை ஹவேர்ட்ஸ் (Kai Havertz) கோல் அடித்தார்.
நெருக்கடி கொடுத்த கானா
அதனைத் தொடர்ந்து 70வது நிமிடத்தில் கானா அணி வீரர் அப்துல் ஃபதாவு (Abdul Fatawu) ஜேர்மனிக்கு பதிலடி கோல் அடித்தார்.

இதனால் ஜேர்மனி அணி வீரர்கள் வெற்றிக்கான கோலினை அடிக்க போராடினர். ஒருவழியாக ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் டெனிஸ் உண்டாவ் (Deniz Undav) கோல் அடித்தார்.
இதன்மூலம் ஜேர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |