யூரோ 2024: ஹங்கேரியை நொறுக்கி ஜேர்மனி அணி 2வது வெற்றி
யூரோ 2024 கால்பந்து தொடரில் ஜேர்மனி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது.
MHP Arean மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ஜேர்மனி மற்றும் ஹங்கேரி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில், ஜேர்மனி அணியின் (Germany) இளம் வீரர் ஜமல் முசியாலா (Jamal Musiala) பாய்ந்து வந்து கோல் அடித்தார்.
அதன் பின்னர் 67வது நிமிடத்தில், மிட்டல்ஸ்டாட் பாஸ் செய்த பந்தை அணித்தலைவர் குண்டோகன் விரைவாக வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார்.
இதற்கு பதிலடியாக கோல் அடிக்க முயற்சித்த ஹங்கேரி அணியினரை ஜேர்மனி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு தடுத்தனர்.
இறுதியில் ஜேர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். அதேபோல் ஹங்கேரி அணி சந்தித்த 2வது தோல்வி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |