நொறுங்கிய இஸ்ரேல் கிரிக்கெட் அணி: 7.3 ஓவரில் 95 ஓட்டங்கள் விளாசி ஜேர்மனி வெற்றி
Germany beat Israel by 9 Wickets: கேரவாவில் நடந்த டி20 போட்டியில் ஜேர்மனி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இஸ்ரேலை வீழ்த்தியது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ண துணை மண்டல ஐரோப்பிய குவாலிஃபையர் போட்டியில் ஜேர்மனி அணி இஸ்ரேலை வீழ்த்தியது.
ஐரோப்பிய குவாலிஃபையர் போட்டி
ஜேர்மனி மற்றும் இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ண துணை மண்டல ஐரோப்பிய குவாலிஃபையர் போட்டி கேரவாவில் நடந்தது.
முதலில் களமிறங்கிய இஸ்ரேல் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 94 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக நிவ் நகவ்கர் 21 ஓட்டங்களும், யைர் நகவ்கர் 16 ஓட்டங்களும் எடுத்தனர். ஜதிந்தர் குமார் மற்றும் அஹ்மதுல்லா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஜேர்மனி அபார வெற்றி
பின்னர் ஆடிய ஜேர்மனி அணி 7.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பென் கோஹ்லர்-கேட்மோர் (Ben Kohler-Cadmore) 26 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார்.
ஜோஷுவா வான் ஹீர்டென் (Joshua van Heerden) 17 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் குவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |