ருத்ர தாண்டவம் ஆடிய ஜேர்மனி! மகளிர் உலகக்கோப்பையில் கோல் மழை பொழிந்து வெற்றி
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜேர்மனி அணி 6-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியை பந்தாடியது.
ஜேர்மனியின் மிரட்டல் ஆட்டம்
ஜேர்மனி மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி மெல்போனில் நடந்தது.
மெல்போர்ன் ரெக்டாங்குலர் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே ஜேர்மனி ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஜேர்மனியின் அலெக்சாண்டரா போப் அசத்தலாக கோல் அடித்தார். அடுத்து அவரே 39வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
Getty Images
மொராக்கோவின் சுயகோல்
கிளாரா 46வது நிமிடத்தில் மிரட்டலாக ஒரு கோல் அடித்தார். மொராக்கோ வீராங்கனைகள் துடுப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது அந்த அணியின் ஹனனே சுயகோல் போட்டார்.
இதனால் ஜேர்மனியின் கோல் 4 ஆக உயர்ந்தது. அதன் பின்னர் ஜேர்மனியின் கோலை தடுக்க மொராக்கோவின் யாஸ்மின் முயன்றபோது, அவரது காலில் பட்டு சுய கோலாக மாறியது.
AFP
இமாலய வெற்றி
ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் ஜேர்மனியின் லீ ஸ்சுலர் தன்னிடம் வந்த பந்தை புயல் வேகத்தில் கோல் ஆக மாற்றினார்.
கடைசி வரை மொராக்கோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜேர்மனி 6-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.
AFP
William West/AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |