நெதர்லாந்திற்கு மரண அடி கொடுத்த ஜேர்மனி: நேஷன்ஸ் லீக்கில் கோல்மழை
Germany beat netherlands by 5-0 goals: நெதர்லாந்து அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் ஜேர்மனி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நேஷன்ஸ் லீக் தொடர் கால்பந்து போட்டியில், ஜேர்மனி அணி 5-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
40 நிமிடங்கள் வரை கோல் இல்லை
ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டி பெர்லினின் Olympiastadion மைதானத்தில் நடந்தது.
நெதர்லாந்து அணியின் நெருக்கடியால் 40 நிமிடங்கள் வரை ஜேர்மனியால் கோல் அடிக்க முடியவில்லை. 41வது நிமிடத்தில் ஜேர்மனியின் டெர்ரி ஸ்செர்ஹான்ட் கோல் அடித்தார்.
கோல்மழை
அதனைத் தொடர்ந்து ஃப்லோரியான் விர்ட்ஸ் 60வது நிமிடத்தில் கோல் அடிக்க, 65வது நிமிடத்தில் நிக்கோ ஸ்லோட்டர்பேக் கோல் அடித்தார்.

பின்னர் 71வது நிமிடத்தில் விர்ட்ஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். அடுத்து ப்ரஜன் க்ருடா 77வது நிமிடத்தில் கோல் அடிக்க, ஜேர்மனி அணி 5-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
குரூப் பி பிரிவில் ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் கிரீஸ் ஆகிய மூன்று அணிகளும் தலா 11 புள்ளிகள் பெற்றுள்ளன.
