2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் ஐரோப்பிய நாடு!
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் அணி என்ற பெருமை ஐரோப்பிய நாடான ஜேர்மனிக்கு கிடைத்துள்ளது.
சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) சாா்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
கடந்த 2018ல் பிரான்ஸ் அணி உலக சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்த உலகக் கோப்பை போட்டி 2022 நவம்பர் 21ம் திகதி கத்தாரில் தொடங்குகிறது.
இதற்காக கண்டங்கள் அளவில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்றில் குழுவிற்கு 6 அணிகள் என A,B,C,D,E,F,G,H,I மற்றும் J என 10 குழுக்களாக நடைபெற்று வருகிறது.
இதில், நேற்று ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்றில் குரூப் J-வில் ஜேர்மனி-வடக்கு மாசிடோனியா அணிகள் மோதின.
ஆட்ட நேர முடிவில் 4-0 என வடக்கு மாசிடோனியாவை வீழ்த்தி ஜேர்மனி அசத்தல் வெற்றிப்பெற்றது.
Timo Werner gets his second! ? pic.twitter.com/mGsBbMEG9q
— ESPN FC (@ESPNFC) October 11, 2021
இந்த அசத்தல் வெற்றியால் குரூப் J-வில் முதலிடத்தை உறுதிசெய்ததின் மூலம் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் அணி என்ற பெருமை ஜேர்மனிக்கு கிடைத்துள்ளது.
This assist from Müller ? pic.twitter.com/Z9FPQWziIQ
— ESPN FC (@ESPNFC) October 11, 2021
தகுதிச்சுற்றில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஜேர்மனி, 7 வெற்றி, ஒரு தோல்வி என 21 புள்ளிகளுடன் குரூப் J-வில் முதலிடத்தை உறுதிசெய்தது ஜேர்மனி.