ஜேர்மனியில் 2026 முதல் ஏர் டாக்சி சோதனை தொடங்க திட்டம்
ஜேர்மனி 2026 முதல் ஏர் டாக்சிகளுக்கான சோதனை வழித்தடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் (BMDV) நாடு முழுவதும் டிரோன்கள் மற்றும் மின்சார விமான டாக்சிகளை (eVTOL) மேம்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் முன்னணி இடமாக ஜேர்மனியை மாற்ற திட்டமிட்டுள்ளது.
செயல்திட்ட கட்டங்கள்:
இந்த திட்டம் நான்கு கட்டங்களாக 2032-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படுத்தப்படவுள்ளது.
- 2026 - முதல்படியாக விமான டாக்சி சோதனைப்பாதைகள் அமைக்கப்படும்.
- 2028 - குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் Advanced Air Mobility (AAM) மேம்படுத்தப்படும்.
- 2030 - இப்பகுதிகள் பிராந்திய போக்குவரத்திற்குள் விரிவாக்கம் செய்யப்படும்.
- 2032 - நாடு முழுவதும் AAM செயல்பாடுகள் செயல்படுத்தப்படும்.
வெர்டிபோர்ட்ஸ் (Vertiports)
விமான டாக்சிகளுக்கான ஸ்பெஷல் டேக் ஆஃப் மற்றும் லாண்டிங் இடங்கள் (Vertiports) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த துறையில் பாதுகாப்பு விதிமுறைகள், சட்டங்கள், மற்றும் பயிற்சி திட்டங்களையும் உருவாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆராய்ச்சித் திட்டங்கள்
AAM மெய்நிகர் ஆய்வுகூடங்கள் அமைக்கப்படும்.
மின்சார விமானங்களுக்கான (eVTOL) தேவையான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
BMDV தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிக்க நிதி வசதிகள் மற்றும் முதலீட்டிற்கு ஊக்கங்களை வழங்கவுள்ளது. 2025-ஆம் ஆண்டில் வெர்டிபோர்ட்ஸ் கட்டமைப்புக்கான முக்கிய பகுதிகளை உருவாக்க ஆய்வுகள் தொடங்கப்படும்.
இந்த தொழில்நுட்பம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக அடைவதற்கு சிக்கலான பிரதேசங்களில் போக்குவரத்து வசதிகளை eVTOL மற்றும் ட்ரோன்கள் வழங்கும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் வோல்கர் விச்சிங் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany plans air taxi test routes from 2026, drones, electric flying taxis (eVTOL), air taxi