ஆயுதங்களை வாங்கி குவிக்க., €800 யூரோ கடன் பெற ஜேர்மனி திட்டம்
நாட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் புதிதாக கடன் வாங்க ஜேர்மன் அரசு திட்டமிட்டுள்ளது.
ஆயுதப் பெருக்கத்திற்கு கடன் பெற ஜேர்மன் திட்டம்
ஜேர்மனி பல ஆண்டுகளாக நிதிச் சிக்கன கொள்கையை கடைபிடித்து வந்த நிலையில், தற்போது அந்த கொள்கையில் இருந்து விலகி நாட்டின் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதற்காக சிறப்பு கடன் திட்டத்தை அரசு திட்டமிட்டு வருகிறது.
பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின் படி, எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 800 பில்லியன் யூரோக்களை கடனாக பெற ஜேர்மன் அரசு திட்டமிட்டுள்ளது.

ஜேர்மனியின் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸின் தலைமையிலான அரசின் இந்த சிறப்புமிக்க முலோபாய மாற்றம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
ராணுவ செலவினங்களை அதிகப்படுத்துதல்
இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் கடனில் இருந்து பெரும் பகுதி தீவிர ஆயுதக் குவிப்பு நடைமுறைக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஆண்டுகளின் நாட்டின் பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கீடு வேகமான வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜேர்மனியின் பாதுகாப்பு பட்ஜெட் €109 பில்லியனை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2030 ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு துறை செலவினங்கள் €183.6 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு பாதுகாப்பு மட்டுமின்றி, உக்ரைனுக்கு சுமார் €11.6 பில்லியன் மதிப்பிலான இராணுவ உதவியை வழங்கவும் ஜேர்மனி ஒப்புக் கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |