ஜேர்மனியில் நாளை முதல் அனைவருக்கும் இது இலவசம்! அரசாங்கம் முக்கிய அறிவிப்பு
ஜேர்மனியில் கொரோனா பரிசோதனை கட்டணம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை முதல் ஜேர்மனியில் இலவச கொரோனா பரிசோதனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று நாட்டின் செயல் சுகாதாரத்துறை அமைச்சர் Jens Spahn அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாவால் நிலைமை மோசமடையும் என தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தததை தொடர்ந்து அரசாங்கம் மீண்டும் கொரோனா பரிசோதனையை இலவசமாக்கியுள்ளது.
ஜேர்மனியில் தொடர்ந்து 5வது நாளாக வெள்ளிக்கிழமையும் கொரோனா தொற்றுகள் உச்சததை எட்டியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (RKI ) பொது சுகாதார ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் கடந்த வாரத்தில் 1,00,000 பேருக்கு 263.7 பேர் என்ற விகிதத்தில் நாட்டில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
தடுப்பூசி போடப்பட்டவர்கள், தொற்றிலிருந்து மீண்டவர்கள் பொது நிகழ்வுகள் கலந்துகொள்ள தொற்று இல்லை என்ற கொரோனா பரிசோதனை முடிவை வழங்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடுகளை ஆதரிப்பதாகவும் Jens Spahn கூறினார்.
இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
அதேவேளை, ஜேர்மனியில் குறைந்தபட்சம் 90% மக்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்க வேண்டும்.
இல்லையெனில் எங்களால் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்று பெர்லினில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் RKI தலைவர் Lothar Wieler கூறினார்.