ஆப்கன் அகதிகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிய ஜேர்மன் அரசு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்த ஆப்கன் நாட்டவர்கள் சுமார் 2,000 பேரை ஜேர்மனிக்கு அழைத்துவருவதாக ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.
ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டது ஜேர்மன் அரசு.
கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிய ஜேர்மன் அரசு
2021ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்த ஆப்கன் நாட்டவர்கள் சுமார் 2,000 பேரை ஜேர்மனிக்கு அழைத்துவருவதாக ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.

அதை நம்பி ஏராளமானோர் பாகிஸ்தானுக்கு தப்பியோடினர். ஜேர்மன் விசா கிடைக்கும் என இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காத்திருக்க, ஜேர்மனியில் புலம்பெயர்தல் அரசியலாகிவிட்ட நிலையில், அந்த ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ள ஜேர்மன் அரசு தயக்கம் காட்டிவந்தது.
இந்நிலையில், இந்த விடயம் குறித்து பேசிய ஜேர்மன் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளரான Sonja Kock, ஜேர்மனிக்கு வருவதற்காக பாகிஸ்தானில் காத்திருக்கும் 640 ஆப்கன் நாட்டவர்கள் இனி ஜேர்மனிக்கு வர முடியாது என்று கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, மனித உரிமைகள் அமைப்புகள் உட்பட சுமார் 250 அமைப்புகள், அபாயகரமான சுழலில் இருக்கும் அந்த ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ளுமாறு கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |