ஜேர்மனியுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேபடுத்தும் கனடா
ஜேர்மனியும் கனடாவும் முக்கிய கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவுள்ளன.
ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி, இரு நாடுகளும் பாதுகாப்பு மற்றும் முக்கிய கனிமங்கள் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன்மூலம், "ஜேர்மனி-கனடா இடையேயேயான உறவுகள் மேலும் வலுப்பெறுகின்றன" என மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள வரி மற்றும் ரஷ்யா, சீனாவை சார்ந்த தொழில்துறைகளி விளக்க முயற்சிக்கும் சூழலில், இந்த ஒத்துழைப்பு உருவாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், lithium, rare earth elements, copper tungsten, gallium, germanium மற்றும் nickel போன்ற உலோகங்களை மேம்படுத்தும் திட்டம் உள்ளது.
இவை இராணுவ உபகரணங்கள், மின்சார வாகனங்கள், quantum computing போன்றவற்றிற்கு முக்கியமானவை.
ஜேர்மனி, முக்கிய கனிமங்களுக்காக சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க விரும்புகிறது. கனடாவில் 200-க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளன. பல முக்கிய உலோகங்களை எடுக்கும் திறன் கொண்டவை.
இந்த ஒத்துழைப்பை உறுதிப்படுத்த கனடா அமைச்சராக்கள் பலர் ஜேர்மனிக்கு சென்றுள்ளனர்.
மேலும், கனடா தனது நீர்மூழ்கி கப்பல் படையை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. ஜேர்மனியின் Thyssenkrupp Marine Systems நிறுவனம் இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany Canada minerals deal, critical minerals agreement 2025, lithium rare earths Germany Canada, Canada defense partnership Germany, supply chain diversification Europe, Canada mining exports to Germany, Merz Carney Berlin summit, EU-China mineral dependency, Thyssenkrupp submarine project, NATO energy security minerals