ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு அதிகரிக்கும் வணிக வாய்ப்புகள்
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு புதிய வணிக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
ஜேர்மனியில் பல தொழிற்சாலைகள் மூடப்படுவதால், அவற்றின் உற்பத்தி திறன்கள் மற்றும் இயந்திரங்கள் ஹங்கேரி மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றப்படலாம் என சிமென்ஸ் ஹங்கேரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாமாஸ் ஜெரானேக் தெரிவித்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்
சிமென்ஸ் ஹங்கேரி நிறுவனம் 140 ஆண்டுகளாக ஜேர்மனியில் செயல்பட்டு வருகிறது.
2025-ல் இந்நிறுவனத்தின் வருவாய் 55.4 பில்லியன் ஃபோரின்ட் (சுமார் 142,000 யூரோ) ஆகும். இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகரிப்பு ஆகும். 2026-லும் இந்நிறுவனத்தன் முன்னேற்றம் நேர்மறையாக உள்ளது.

ஜேர்மனியின் சவால்கள்:
உள்நாட்டில் தொழில் கடந்த 3 ஆண்டுகளாக மந்தநிலையில் உள்ளது. உற்பத்தி ஆர்டர்கள் குறைந்துள்ளது.
இதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன அல்லது பணியாளர்களை குறைந்துள்ளன.
ஹங்கேரியின் முயற்சிகள்
இந்நிலையில், ஹங்கேரி “Magyar Gépgyártó” (Hungarian Mechanical Engineering) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மலிவான வடிவமைப்புகள், தொழில்நுட்ப ஆதரவு, அறிவு பரிமாற்றம் ஆகியவை இத்திட்டத்தின் சிறப்பட்டு அம்சங்களாகும். பல தொழில்துறை நிறுவனங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன.
ஜேர்மனியின் நிலை
2025 இறுதிக்குள் சுமார் 23,900 நிறுவனங்கள் திவாலாகும் என எதிர்பார்க்கப்படுவதாக Creditreform ஆய்வு கூறுகிறது.
சவால்கள்
குறைந்த வளர்ச்சி, முதலீட்டில் எச்சரிக்கை., அதிக எரிசக்தி செலவுகள், வணிக நம்பிக்கை குறைவு ஆகியவை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும் சவால்களாக உள்ளன.
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால், உற்பத்தி திறன்கள் ஐரோப்பாவில் வேறு நாடுகளுக்கு மாற்றப்படும். இது ஹங்கேரிக்கு பெரிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும் என சிமென்ஸ் ஹங்கேரி நிர்வாகம் கருதுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany factory closures 2025, Hungary Siemens opportunities relocation of plants, Hungarian Mechanical Engineering program, German economy weak growth, Hungary export market dependence on Germany, Siemens Hungary revenue growth, Hungary business opportunities from German manufacturing decline, Central Europe industrial relocation opportunities, Hungary competitive advantage