கனடா குறித்து ஜேர்மனி தெரிவித்துள்ள கருத்து: கொந்தளிக்கும் கனேடிய அமைச்சர்கள்
கனடா குறித்து ஜேர்மனி தெரிவித்துள்ள ஒரு கருத்து, கனேடிய அமைச்சர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
அப்படி என்ன சொன்னது ஜேர்மனி?
கனடாவிலுள்ள ஜேர்மன் தூதரகத்தில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த ஜேர்மன் தூதரான ஜெனிஃபர் மார்கன், எதிர்காலத்தில், ஜேர்மனியும் ஐரோப்பாவும் கனடாவிடமிருந்து வாங்கும் இயற்கை எரிவாயுவின் அளவு குறைந்துபோகும் என்று கூறினார்.]

இயற்கை எரிவாயு சந்தை சுருங்கிப்போகும் என்று அனைத்து ஆய்வுகளும் தெரிவிக்கின்றன என்று கூறிய ஜெனிஃபர், ஜேர்மனியைப் பொருத்தவரை, தாங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிச் செல்வதாகவும், தங்கள் எரிவாயுத் தேவை குறைய இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயம்தான் கனடாவை கோபமடையச் செய்துள்ளது.
விடயம் என்னவென்றால், கனடா தனது திரவ இயற்கை எரிவாயு தொழில்துறையை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அப்படியிருக்கும் நிலையில், ஐரோப்பாவின் இயற்கை எரிவாயுத் தேவை குறைந்துபோகும் என்றால், அது கனடாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்குமே!
ஆகவேதான் ஜேர்மன் தூதரான ஜென்ஃபரின் கருத்து கனேடிய அமைச்சர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஆளாளுக்கு, கீழிறங்கிவந்து ஐரோப்பாவை மோசமாக திட்டத் துவங்கியிருக்கிறார்கள் கனடா அமைச்சர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |