குடியுரிமை விதிகளை மீண்டும் கடுமையாக்கும் முயற்சியில் ஜேர்மன் கட்சிகள்
Germany's conservatives launch another bid to tighten citizenship rules: ஜேர்மனியின் கன்சர்வேட்டிவ் கட்சியினர், குடியுரிமை விதிகளை மீண்டும் கடுமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
ஜேர்மனியின் ஆளும் கூட்டணியிலுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியினர், குடியுரிமை விதிகளை மீண்டும் கடுமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
குடியுரிமை விதிகளை கடுமையாக்க முயற்சி
ஜேர்மனியை ஆளும் கூட்டணியில் Christian Democratic Union (CDU), Christian Social Union (CSU) மற்றும் Social Democratic Party (SPD) என்னும் மூன்று கட்சிகள் உள்ளன.

இவற்றில், ஆளும் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் சார்ந்த கட்சி CDU கட்சி, அதன் சகோதரி கட்சியாகிய CSU கட்சி ஆகிய இரண்டும், கன்சர்வேட்டிவ் கட்சிகள்.
இந்த கன்சர்வேட்டிவ் கட்சிகள் இரண்டும், குடியுரிமை விதிகளை மீண்டும் கடுமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
வெளிநாட்டவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ஐந்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்ற விதியை மாற்றி, முன்னிருந்ததுபோல, மீண்டும் எட்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என மாற்ற கன்சர்வேட்டிவ் கட்சியினர் விரும்புகிறார்கள்.
அத்துடன், சில விதிவிலக்குகள் தவிர்த்து, மற்றவர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை மறுக்கவும் அவர்கள் திட்டம் முன்வைத்துள்ளார்கள்.
மேலும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க ஜேர்மன் மொழித்தகுதியை B1 மட்டத்திலிருந்து B2 மட்டத்துக்கு உயர்த்தவும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் திட்டம் வைத்துள்ளார்கள்.
ஆக மொத்தத்தில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுவருவதாகவும், அது குறித்து தங்கள் கூட்டணியிலுள்ள SPD கட்சியுடன் விவாதிக்க இருப்பதாகவும் Bild மற்றும் The Local ஆகிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.