பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை: ஜேர்மன் மாகாணங்கள் பல திட்டம்
உலக நாடுகள் சில பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதித்துவரும் நிலையில், ஜேர்மன் மாகாணங்கள் பல, பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க திட்டமிட்டுவருகின்றன.
பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை
உண்மையில், மாகாண அரசுகள் பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க தயக்கம் காட்டி வரும் நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கும்போது பள்ளிகளில், சில விதிவிலக்குகளுடன் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க Hesse மாகாணம் முடிவு செய்துள்ளது.
ஆசிரியர்கள் பலர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். பிள்ளைகள் டெஸ்குக்குக் கீழே மொபைலை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பதே ஒரு கவலையாகிவிட்டது என்கிறார்கள் சில ஆசிரியர்கள்.
விடயம் என்னவென்றால், சில பள்ளிகளில் மாணவ மாணவியரே ஸ்மார்ட்போன் தடையை வரவேற்றுள்ளார்கள்.
வகுப்புகளின்போது பிள்ளைகளின் கவனம் சிதறுவது இந்த தடையால் தவிர்க்கப்படும் என்பதுடன், சைபர் வம்புக்கிழுத்தலும் குறையும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் நீண்ட நாட்களுக்கு முன்பே பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதித்துவிட்டன.
நெதர்லாந்து கடந்த ஆண்டு பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்தது.
ஜேர்மனி பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க நீண்ட காலமாக தயக்கம் காட்டிவந்த நிலையில், தற்போது சோதனை முறையில் பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |