சீனாவுடனான வர்த்தகப் போரினால் ஜேர்மனி சந்திக்கப்போகும் பிரச்சனை! வெளியான தகவல்
சீனாவுடனான வர்த்தகப் போரால் ஜேர்மனிக்கு பிரெக்சிட்டை விட ஆறு மடங்கு அதிகமாக செலவாகும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், சீனாவுடனான வர்த்தகப் போரினால் ஜேர்மனிக்கு செலவினங்கள் அதிகரிக்கும் என்றும், பிரெக்சிட்டை விட இது ஆறு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியும், ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவை தங்கள் பொருளாதாரங்களில் இருந்து வெளியேற்றினால் இந்த நிலை ஏற்படும் என Ifo நிறுவனம் குறித்த ஆய்வின் முடிவை மேற்கோள் காட்டியுள்ளது.
இவ்வாறு நடக்கும்பட்சத்தில் வாகனத் தொழிலில் 8.47 சதவிதமும், போக்குவரத்து உபகரண உற்பத்தியாளர்கள் 5.14 சதவிதமும், இயந்திர பொறியியல் துறையில் 4.34 சதவிதமும் இழப்பை சந்திக்கக்கூடும்.
cde.news
Ifo நிறுவனத்தின் துணை ஆசிரியர் ஃப்ளோரியன் டோர்ன் கூறுகையில், 'ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரக் கொள்கையின் குறிக்கோள், அமெரிக்கா போன்ற ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் மூலோபாய கூட்டாண்மை மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை நிறுவதாக இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
அதேபோல், சில சந்தைகள் மற்றும் சர்வாதிகார ஆட்சிகள் மீதான சார்பைக் குறைக்க, நிறுவனங்கள் மற்ற நாடுகளை நோக்கிச் செல்ல வேண்டும் என Vbw தொழிற் சங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
helsinkitimes.fi