இந்திய பெற்றோரின் மனுவை நிராகரித்த ஜேர்மன் நீதிமன்றம்: குழந்தை அரிஹா உள்ளூர் ஏஜென்சியிடம் ஒப்படைப்பு
இந்திய பெற்றோரின் மனுவை நிராகரித்த ஜேர்மன் நீதிமன்றம் குழந்தை அரிஹாவை உள்ளூர் ஏஜென்சியிடம் ஒப்படைத்தது.
ஜேர்மன் நீதிமன்றம் உத்தரவு
ஜூன் 13 அன்று ஜேர்மனியின் பாங்கோவில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் 28 மாத குழந்தையான அரிஹா ஷாவை பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து நீதிமன்றம் சிறுமியை Jugendamt எனும் உள்ளூர் ஏஜென்சியான ஜேர்மன் இளைஞர் சேவையான (Germany's Youth Welfare Office) அலுவலகத்திடம் ஒப்படைத்தது.
குழந்தையின் தந்தையின் மனு நிராகரிப்பு
பெண் குழந்தையை தங்களிடம் ஒப்படைக்குமாறு தாரா ஷா மற்றும் பவேஷ் ஷா ஆகியோரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இது தவிர, குழந்தையை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதுமட்டுமின்றி ஜேர்மன் நீதிமன்றம், தீர்ப்பு வழங்கும் போது, பெண் குழந்தையின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க பெற்றோருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியது.
பல கோரிக்கைகள் வீண்
ஜூன் 3 அன்று, வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Arindam Bagchi, அரிஹாவை இந்தியாவுக்கு விரைவில் அனுப்ப அனைத்து முயற்சிகளையும் செய்யுமாறு ஜேர்மன் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
முன்னதாக ஜூன் மாதம், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 59 எம்.பி.க்கள் , இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேனுக்கு கூட்டாக கடிதம் எழுதினர். அரிஹா விரைவில் இந்தியா வருவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு ஜேர்மன் தூதரிடம் எம்.பி.க்கள் கேட்டுக் கொண்டனர்.
முழு விஷயம் என்ன?
பிப்ரவரி 2021-ல் பிறந்த அரிஹா, தனது அந்தரங்க உறுப்புகளில் காயங்களுக்கு உள்ளானதால், அரிஹாவை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஏழு மாத குழந்தையாக இருந்த அரிஹா அவரது சிகிச்சைக்குப் பிறகு ஜுஜெண்டாம்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரிஹாவின் உடலில் இருந்த காயங்கள் காரணமாக பெற்றோர் அவளை துஷ்பிரயோகம் செய்ததாக ஜேர்மன் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
BCCL
மருத்துவமனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, சிறுமியின் பெற்றோர் சிறுமி ஒரு சிறிய விபத்தில் காயமடைந்ததாகவும், அதன் காரணமாக அவளது அந்தரங்கப் பகுதியிலிருந்து இரத்தப்போக்கு தொடங்கியதாகவும் கூறியுள்ளனர்.
இப்போது அரிஹாவுக்கு கிட்டத்தட்ட இரண்டரை வயது ஆகிறது. ஆனால் இதுவரை பெற்றோர்கள் பேச்சு எடுபடவில்லை. அவர்களது கோரிக்கையும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |