பருவநிலை ஆர்வலர்களுக்கு 400,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம்: பின்னணி
ஜேர்மனியில், நீதிமன்றம் ஒன்று பருவநிலை நடவடிக்கை ஆர்வலர்களுக்கு 400,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.
400,000 யூரோக்கள் அபராதம்
ஜேர்மனியின் ஹாம்பர்க் நீதிமன்றமே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2023ஆம் ஆண்டு, Last Generation என்னும் அமைப்பைச் சேர்ந்த பருவநிலை நடவடிக்கை ஆர்வலர்கள் 10 பேர், ஆறு ஆண்களும் நான்கு பெண்களும், ஹாம்பர்க் விமான நிலையத்தின் வேலியை வெட்டி, உள்ளே நுழைந்தனர்.

அத்துடன், அவர்களில் நான்குபேர் தங்களை ஓடுபாதையுடன் தங்களை பசையால் இணைத்துகொண்டனர்.

அவர்களுடைய நடவடிக்கைக்கு எதிராக Eurowings விமான நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அந்த வழக்கில்தான் ஹாம்பர்க் நீதிமன்றம் அந்த 10 பருவநிலை நடவடிக்கை ஆர்வலர்களுக்கும் 400,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.
அத்துடன், மீண்டும் அவர்கள் விமான ஓடுபாதையை மறித்தால், ஆறு மாதங்கள் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |