இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு

Germany
By Balamanuvelan Jan 30, 2026 09:21 AM GMT
Report

ஜேர்மனியில் வெள்ளையர்கள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை நிலவுவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில், இனத்தின் அடிப்படையில், வீடு பார்க்கக்கூட தன்னை அனுமதிக்கவில்லை எனக்கூறி பெண்ணொருவர் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பொன்று கவனம் ஈர்த்துள்ளது.

வீடு வாடகைக்கு விடுவதில் பாரபட்சம்

ஜேர்மனியில், வெள்ளையர்கள் அல்லாதவர்களுக்கு வாடகைக்கு வீடு விடப்படுவதில் பாகுபாடு காட்டப்படுவது தொடர்பில், German Center for Integration and Migration Research (DeZIM) என்னும் ஆய்வமைப்பு ஆய்வொன்றை மேற்கொண்டது. 

இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு | Germany Court Verdict On Discrimination By Realtor

அந்த ஆய்வில், இஸ்லாமியர்கள் மற்றும் கருப்பினத்தவர்களுக்கு வீடு கிடைப்பதில் அதிக பிரச்சினை உள்ளது சமீபத்தில் தெரியவந்தது.

மேலும், வீடு வாடகைக்கு என்னும் விளம்பரத்தைப் பார்த்து விசாரிக்கும்போதே, வாடகைக்கு வீடு தேடுவோரின் பெயர் ஜேர்மானியர் பெயர் போல் இல்லாவிட்டால், அவர்களில் பலர் வீடு பார்க்க அழைக்கப்படுவதே இல்லை என்றும் கூறப்பட்டது. 

ஜேர்மனிக்கு புலம்பெயர் பணியாளர்கள் தேவை: ஆனால்...

ஜேர்மனிக்கு புலம்பெயர் பணியாளர்கள் தேவை: ஆனால்...

கவனம் ஈர்த்துள்ள வழக்கு

இந்நிலையில், இனத்தின் அடிப்படையில், வீடு பார்க்கக்கூட தன்னை அனுமதிக்கவில்லை எனக்கூறி பெண்ணொருவர் தொடர்ந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது ஜேர்மன் உச்சநீதிமன்றம்.

ஹுமைரா வசீம் (30) என்னும் இஸ்லாமியப் பெண், ஜேர்மனியில் வீடு வாடகைக்குப் பார்ப்பதற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு ஒன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். 

இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு | Germany Court Verdict On Discrimination By Realtor

பாகிஸ்தான் பின்னணி கொண்டவரான அவர் பலமுறை அப்பாயிண்ட்மெண்ட் கேட்டும், அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் மற்றும் கருப்பினத்தவர்களுக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை உள்ளது என்பதை நன்கறிந்திருந்த ஹுமைரா, பிறகு ஜேர்மன் பெயர்களில் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளார்.

அப்போது அவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆதாரங்களுடன், இனத்தின் அடிப்படையில் தனக்கு பாரபட்சம் காட்டப்பட்டதாகக் கூறி, தனக்கு அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்தார் ஹுமைரா.

அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஹுமைராவுக்கு 3,000 யூரோக்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வழக்குக்கான செலவை அளிக்கவேண்டும் என்றும் Darmstadt நகர நீதிமன்றம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு | Germany Court Verdict On Discrimination By Realtor

ரியல் எஸ்டேட் உரிமையாளர் மேல்முறையீடு செய்ய, வழக்கு உச்சநீதிமன்றத்தை அடைந்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஹுமைராவுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது என்று கூறியுள்ளதுடன், Darmstadt நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ரியல் எஸ்டேட் நிறுவனம் ஹுமைராவுக்கு 3,000 யூரோக்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வழக்குக்கான செலவை அளிக்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US