ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 50,000 பேருக்கு தொற்று உறுதி
ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50,000 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகளின்படி, 24 மணிநேரத்தில் 50,196 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் தொடங்கிய நாளிலிருந்து அதிகளவான வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளது இதுவே முதன்முறையாகும்.
இதனையடுத்து பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரையில் 67 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், இந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் Saxony, Bavaria மற்றும் Berlinல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, அதாவது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் ஹொட்டல்கள், பார்கள், உள்விளையாட்டு அரங்கத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.