Europe First திட்டத்தை செய்லபடுத்திய முதல் ஐரோப்பிய நாடு
Europe First திட்டத்தை செய்லபடுத்திய முதல் ஐரோப்பிய நாடாக ஜேர்மனி உருவெடுத்துள்ளது.
ஜேர்மனி, தனது பாதுகாப்பு கொள்முதல்களில் அமெரிக்காவை விலக்கி, ஐரோப்பிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்தும் Europe First திட்டத்தை செய்லபடுத்த தொடங்கியுள்ளது.
2025 செப்டம்பர் முதல் 2026 டிசம்பர் வரை, ஜேர்மன் அரசு 154 முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதில் அமெரிக்கா மூலம் பெறப்படும் உபகரணங்கள் 8 சதவீதம் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், NATO கூட்டாளிகள் தங்களது GDP-யில் 5 சதவீதம் வரை பாதுகாப்பு செலவுகளை உயர்த்தவேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கோரிக்கையை தொடர்ந்து உருவானது.
மேலும் அமெரிக்க ஆயுதங்களை அதிகமாக வாங்கவேண்டும் என்ற அழுத்தமும் இருந்தது. இதனால், ஜேர்மனி "Buy European" என்ற புதிய விதிமுறையை பின்பற்றுகிறது.
SIPRI அமைப்பின் தரவுகளின்படி, 2020-2024 காலப்பகுதியில் ஐரோப்பாவுக்கான அமெரிக்க ஆயுத இறக்குமதி மும்மடங்காக அதிகரித்துள்ளது.
2015-2019 காலத்தில் 13 சதவீதமாக இருந்தது, அனால் 2020-2024 காலத்தில் இது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் ஆயுத இறக்குமதிகளை இரட்டிப்பாக்கியுள்ளன, இதில் இரண்டு மூன்றில் ஒரு பகுதி அமெரிக்காவிலிருந்து வந்தது.
ஜேர்மனி மட்டும் 334 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது, இதில் 70 சதவீதம் அமெரிக்காவிலிருந்து வந்தது.
இந்நிலையில், இந்த புதிய அணுகுமுறை, ஐரோப்பா தனது பாதுகாப்பு துறையில் தற்சார்பை வளர்த்துக்கொள்ளும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany cuts US arms, Germany europe first plan, Germany europe first defence startegy